தலச்சிறப்பு |
மூலவர் 'கடைமுடிநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில், மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'அபிராமியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
பிரம்மா, வருணன் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : 94427 79580.
|